February 18th, 2019 | : செய்திகள் |

ஆரம்ப பாடசாலை மாற்றங்களில் அதிக கவனம் செலுத்தும் கல்வி அமைச்சர்

கல்வித்துறை அமைச்சர் Jean michel Blanque னால் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன. எனது கூடுதல் கவனம் ஆரம்பப்பாடசாலை மாற்றங்களிலேயே செறிந்துள்ளது என்கிறார் அமைச்சர்.

ஆரம்ப பாடசாலைகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் கல்வித்தரம் பற்றிய அவதானிப்பு முக்கியமானது. அதன் பிற்பாடே மாணவர்களின் அல்லது அந்த வகுப்பின் தேவைகளுக்கேற்ப மாற்றங்களைச் சரிவரச் செய்ய முடியும் என அமைச்சர் மேலும் தெரிவிக்கிறார்.

இதற்கேற்ப CP மற்றும் CE1 மாணவர்களுக்கு தேசிய அளவி
லான தரம் அறியும் பரீட்சை நடாத்தப்பட்டது வருட ஆரம்பத்தில்
இத்தகைய பரீட்சையை நடாத்துவதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரத்தை ஆசிரியர்களால் அறியக்கூடியதாக விருக்கும். மாணவர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவனுக்கும் என்ன தேவைப்படுகின்றதோ அதற்கேற்ப நெறிப்படுத்தப்படுவர்.

செப்டம்பர் மாதம் முதல் முறையாக நடாத்தப்பட்ட பரீட்சையின் இறுதியில் கீழ்வரும் புள்ளிகளை அவதானிக்கக் கூடியதாகவிருந்தாக அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது.

  • CP வகுப்புகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களில் 23 சதவீத மான மாணவர்கள் அகரவரிசை எழுத்துக்களைச் சரியாக அறியாதவர் களாகவும் அவை எழுப்பும் சத்தங்கள் என்ன என்று தெரியாதவர்களாகவும் உள்ளனர்.
  • 8 சதவீதமானவர்கள் இலக்கங்களை எழுதத் தெரியாதவர்களாகவுள்ளனர்.

  • CE1 Eமாணவர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒரு நிமிடத்திற்கு 30 இற்குக் குறைவான சொற்களையே வாசிக்கின்றனர். CE1மாணவனுக்கு நிமிடத்திற்கு 50 சொற்களாக இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
  • இரண்டில் ஒருவர் (49 சதவீதத்தினர்) மனக்கணக்கில் மிகவும் குறைவான நிலையிலும் 47 சதவீதமானவர்கள் சிறுதானக்கூட்டல் கழித்தல் கணக்குகள் கூட தெரியாதவர்களாகவும் உள்ளனர்.

ஒரு மாணவனின் இத்தகைய பின்தங்கிய நிலைக்கு மாணவனினது சமூக மற்றும் குடும்ப நிலையே முக்கிய காரணமாகும் எனக் கல்வித்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மிகவும் பின்தங்கிய நிலையில் அல்லது வீட்டில் வேறு மொழி பேசும் குடும்பத்திலிருந்து வரும் ஒரு 4 வயது குழந்தை வீட்டில் பிரெஞ்சு மொழி பேசும் குடும்பத்திலிருந்து வரும் குழந்தையிலும் பார்க்க 30 மில்லியன் சொற்களை குறைவாக அறிந்தவர்களாகவுள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வுகளை பாடசாலைகளே ஈடுசெய்ய வேண்டும். பின்தங்கிய நிலையிலிருக்கும் மாணவனுடன் உறுதுணையாக இருக்க வேண்டும். ஒரு மாணவனையும் ஒதுக்கி வைக்கக்கூடாது.

ஆசிரியர்களுக்கு கற்பித முறைகள் தொடர்பான செயற்திட்டம் வழங்கப்படும். இருப்பினும் அவர்கள் தமது கற்பித முறைகளுக்கு ஏற்ப சுதந்திரமாகவும் செயற்பட முடியும். சரியான அணுகுமுறைகளால் மாணவர்களின் அடிப்படைச்சிக்கல்கள் களையப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தரம் அறியும் பரீட்சை முறைக்கு சில ஆசிரியர்
அமைப்புளால் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப்பரீட்சைகள் கல்வித்துறை மற்றும் வெவ்வேறு துறை நிபுணர்களின் நீண்ட ஆய்வுகளுக்குப் பின்னர் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்பரீட்சை மதிப்பீடுகள் மாணவனை பின்தள்ளுவதற்கு அல்ல, அவனை நெறிப்படுத்துவதற்கே! என அமைச்சர
விளக்கம் அளித்துள்ளார்.