February 9th, 2019 | : செய்திகள் |

ஜனவரி 16ல் ‘மஞ்சள் சட்டை’ போரட்டக்காரர் வெளியிட்ட நீண்ட கோரிக்கைகளுள் சில..

# வதிவிடமற்றோர் (SDF) என்று எவரும் இருக்கக்கூடாது.


# ஆக்ககுறைந்த அடிப்படைச்சம்பளம் 1300 யூரோவாக இருத்தல் வேண்டும். (net)


# எரிபொருள் விலையேற்றம் நிறுத்தப்பட வேண்டும்.
குறைந்த பட்ச ஓய்வூதியம் 1200 யூரோ


# பொதுமக்கள், கைத்தொழிலாளர்கள், சுயதொழில் நிறுவனங்கள், விவசாயிகள் என அனைவருக்கும் Sécurité Social காப்பீட்டு முறை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.


# அதிஉயர் சம்பளம் 15,000 யூரோவாக மட்டுப்படுத்த வேண்டும்.


# பாராளுமன்ற உறுப்பினரோ, அரச பணியாளரோ அவர்களுக்கு வழங்கப்படும் போக்குவரத்துச் செலவு,Ticket ரெஸ்ட்ரோன்ட், விடுமுறை செலவீனங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.


# பிரான்ஸ் தொழில் நிறுவனங்களை சிறு தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும். உலகமயமாக்கலால் பிரான்சுக்குள் நுழையும் பெரு நிறுவனங்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.


# கட்டாயக் குடிவரவு தொடர்பான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து அந்ததந்த நாடுகளுடன் இணைந்து தீர்வுகள் காணவேண்டும்.


# புகலிடம் கோருவோர் சரியான முறையில் கவனிக்கப்பட வேண்டும். உறைவிடம், உணவு, கல்வி நிச்சயம் கொடுக்க வேண்டும். ஐநாவுடன் இணைந்து சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.


# ஊனமுற்றோருக்கான கொடுப்பனவு அதிகரிக்க வேண்டும்.


# பிரான்சின் சொத்துக்களை வெளிநாடுகளிடம் விற்பதை நிறுத்த வேண்டும். குறிப்பாக விமான நிலையங்கள்.


# வருமான வரியை நேரடியாக சம்பளத்திலிருந்து எடுக்கும் Prélevement à la Sourceந) முறையை நிறுத்த வேண்டும்.


# பிரான்ஸ் முன்னாள் அதிபர்களுக்கான வாழ்க்கை இறுதிவரையாக வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகள் மறறும் கூடுதல் சலுகைகளை நிறுத்த வேண்டும்.


# ஓய்வூதியம் பெறும் வயது 60 ஆக மாற்ற வேண்டும்.
கடின வேலை புரிவோருக்கு 55 வயதாக மாற்ற வேண்டும்.


#Carte Bleue மூலம் ஒரு நுகர்வாளர் பணம் செலுத்தும் போது பணம் பெறும் வர்த்தக நிறுவனத்திடம் வங்கியால் பெறப்படும் கூடுதல் வரியை நிறுத்த வேண்டும்.


# பாடசாலைகளில் ஆரம்ப பாடசாலை முதல் மேல்நிலை வரை ஒரு வகுப்பில் ஆகக்கூடியதாக 25 மாணவர்கள் மட்டுமே.


# வீட்டு வாடகைகளை மட்டுப்படுத்தல்.


# பிரான்ஸ் தனது கடன்களுக்காக செலுத்தும் வட்டியை நிறுத்தி முதலில் முதலை செலுத்தி முடிக்க வேண்டும்.
ஏழை மக்கள் மீது மீண்டும் மீண்டும் கடனைச் சுமத்தி
வரியை அறவிடாமல், வரி செலுத்தாது பதுக்கப்பட்டுள்ள 80 மில்லியார்ட் யூரோக்களிலிருந்து வரியை அறவிட்டு முதலைச் செலுத்தி முடிக்க வேண்டும்.#