February 9th, 2019 | : செய்திகள் |

தேசிய விவாதம்

மஞ்சள் சட்டைப் போராட்டங்களுக்கு முடிவு காணுவதற்காக பிரான்சில் பாரிய தேசிய விவாதம் (Le Grand Débat National) நடைபெற்று வருகின்றது. இவ்விவாதத்திற்கான முதலாவது அறிவிப்பை டிசம்பர் 18ம் திகதி அதிபர் இம்மனுவல் மக்ரோன் முன்வைத்தார். ஜனவரி 15 முதல் மார்ச் 15 வரை இவ்விவாதம் பிரான்சின் சகல பகுதிகளிலும் நடைபெறும். பிரான்ஸ் நாட்டவர் அனைவரும் இதில் பங்குபற்ற முடியும்.

இவ்விவாதத்திற்காக நான்கு கருப்பொருட்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1. சுற்றுச் சூழல் மாற்றங்கள்
2. வரி விதிப்புக்கள் 
3. அரச அமைப்பில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள்
4. ஜனநாயகம் மற்றும் குடியுரிமை

நீண்ட காலமாக மக்களின் குரலைக் கேட்க பிரான்ஸ் அரசியல்
தலைவர்கள் தவறிவிட்டனர். இக்காரணத்தினாலேயே மக்கள் மிகவும் கோபமடைந்துள்ளனர். ஒவ்வொரு பிரான்ஸ் குடிமகனினதும் குரலை வெளிக்கொண்டுவருவதே இவ்விவாதத்தின் நோக்கம் என விவாதம் தொடர்பாக கருத்துத்தெரிவித்திருக்கிறார் அதிபர் மக்ரோன்.

ஜனவரி 14ம் திகதி “பிரான்ஸ் மக்களுக்கு ஒரு கடிதம் ” எனத்தலைப்பிட்டு வெளியிட்ட ஐந்து பக்க அறிக்கையில்; இவ்விவாதத்தில் முன் வைக்கப்பட்டுள்ள கருப்பொருட்களின்மீது எத்தகைய விவாதங்களை முன்வைப்பது, விவாதங்களில் எவ்வாறு பங்குபற்றுவது எனப் பல அறிவுறுத்தல்களையும் அவர் மேலும் வழங்கியுள்ளார்.

நீங்கள் எல்லாவிதமான கேள்வி களை யும் எழுப்பலாம்! எல்லா விதமான கருத்துக்களையும் முன் வைக்கலாம். எதற்கும் தடையில்லை. இது ஜனநா யக நாட்டின் அடிப்படை உரிமை. ஆனால், அரசு எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் என்றோ அல்லது ஏற்றுக்கொள்ளமுடியும் என்றோ எண்ணிவிட முடியாது. ஆனாலும், குறைந்த பட்சம் அதிகாரத்துக்கு எதி ராக பேசுவதற்கு விவாதிப்பதற்கு அஞ்சாத மக்கள் நீங்கள் என்பதை நிரூபிக்க முடியும் என அதிபர் மேலும் சூளுரைத்துள்ளார்.

பிரான்சை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கு வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதற்காக நாம் சரிசெய்த நடவடிக்கைகள் மற்றும் சட்டமாற்றங்கள் போன்றன
மறுபரிசீலனை செய்யப்பட மாட்டாது என அறுதியிட்டுக்கூறும் அதிபர். இச்சட்ட மாற்றங்களுள் குறிப்பாக பிரான்சிலுள்ள அதீத செல்வந்தர்கள் மீதான வரிவிலக்கு சட்டமாற்றத்தினை சுட்டுகின்றார்.
ISF – Impôt de solidarité sur la Fortune எனப்படும் இது தொடர்பான வரி 1981 முதல் பிரான்ஸ் இடதுசாரிகளால் அமுல்படுத்தப்பட்டு 2018 ஐனவரி முதல் அதிபர் இம்மனுவல் மக்ரோனால் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

@ குடிவரவாளர் மற்றும் அகதிகள் தொடர்பாக பெரிதும் பேசப்படும் என எதிர்பார்க்கப் பட்டாலும் அதிபரால் முன்வைக்கப்பட்ட கருப்பொருட்களில் நான்காவது புள்ளியான ஜனநாயகம் மற்றும் குடியுரிமையின் கீழ் பின்வரும் ஐந்து புள்ளிகள் அதிபரால் முன் வைக்கப்பட்டுள்ளன.

@ குடிவரவாளர்கள் தொடர்பாக எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்?

@ புகலிடக் கோரிக்கைக்கான வருடாந்த இலக்குகளை பாராளு மன்றம் முடிவு செய்வதை விரும்புகிறீர்களா?

@ புகலிட கோரிக்கை தொடர்பான
சவாலை பிரான்சில் நடைமுறைப் படுத்த உங்கள் முன் மொழிவுகள் என்ன?

@ மதசார்பின்மையை எவ்வாறு வலுப்படுத்துவது?

@ பல்வேறு மக்கள் கூடிவாழும் பிரான்சில் குடியரசின் மதிப்பீடுகளை எவ்வாறு பேணுவது?

மக்கள் குறைவாக வாழும் பகுதிகளில்
அந்தந்த பகுதி மாநகர சபைத் தலைவர்களால் பொதுவிவாதங்கள் வழிநடாத்தப்படும். விவாதங்;கள் நடாத்தப்படும் இடங்கள் இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இணையத் தளத்தில் அறிவிக்கப்படும். ஐனவரி 21 முதல் பிரான்ஸ் குடிமக்கள் ஒவ்வொருவரும் தமது கேள்விகளையும் கருத்துக்களையும் https:// granddebat.fr இணையத்தளத்தின் மூலம் பதிவு செய்ய முடியும்.

பிரான்சில் மட்டுமல்லாது பிரான்சின் கடல்கடந்த மாகாணங்கள் மற்றும் பிரான்ஸ் மக்கள் செறிந்து வாழும் வெளிநாடுகளிலும் ஒரு தேர்தல் போன்று ஒருங்கமைக்கப்பட்டுள்ளது.

விவாதங்கள் அனைத்தும் தேசிய விவாத ஆணையகத் தலைவர் Chantal Jouanno தலைமையினாலேயே கண்காணிக்கப்படவிருந்தது. இவர் கருத்து முரண்பாடுகளால் மறுத்துவிட்டமையினால் அதிபரின் அரசிலிருந்து இரு அமைச்சர்கள் ஒருங்கமைப்புச் செய்யவுள்ளனர்.
ஒருவர் Emmanuelle Wargon சுற்றுச் சூழல் அமைச்சின் அரச காரியதரசி – கட்சி சார்பு அற்றவர்.
மற்றவர் La République en marche கட்சியைச்சேர்ந்த
Sébastien Lecornu பிராந்திய ஆட்சி தொடர் அமைச்சர்
இது ஒரு தேர்தலோ அல்லது ஒரு வாக்கெடுப்போ இல்லை. இது மக்களுக்கும் அரசுக்குமான ஒரு கலந்துரையாடல். உங்கள் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் பிரான்ஸ் குடியரசின் மதிப்புகளை எம்மிடையே மட்டுமல்லாது ஐரோப்பிய மற்றும்; சர்வதேச அளவில்
வலுப்படுத்துபவையாக அமையும் என எதிர்பார்க்கிறேன் என்கிறார் அதிபர் இமனுவல் மக்ரோன்.