February 18th, 2019 | : செய்திகள் |

பாரிஸ் மாநகருக்கான புதிய திட்டங்கள்..

பாரிஸ் மாநகர மேயர் ஆன் ஹிடல்கோ வருடாந்த வாழ்த்துச் செய்தியை ஜனவரி 10ம் திகதி வெளியிட்டார். பாரிஸ் மாநகருக்கான புதிய எதிர்காலத்திட்டங்களைத் தெரிவித்திருந்தார். அவற்றில் முக்கியமானவையாக,

  • 11 வயதுக்கு குறைவானவர்களுக்கு பொதுப் போக்குவரத்து முற்றிலும் இலவசமாகும். தற்போது 4 வயது வரையே இலவசமாகும்.
  • மற்றும் 20 வயதுக்குக் குறைந்த அனைத்து ஊனமுற்றோர்க்கும் பொதுப் போக்குவரத்து இலவசமாகும்.
  • Collège மற்றும் Lycée மாணவர்களுக்கு 50 சதவீதம்வரை விலைக்கழிவையும் அறிவித்துள்ளார். இதன் மூலம் ஒரு மாணவர் வருடத்துக்கு 175 யூரோ வரை சேமிக்க முடியும்.
  • 14 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு Velibe சந்தா இலவசம். இவ்வறிவிப்புகள் செப்டம்பர் 2019 முதல் அமுலுக்கு வரும்.
  • பாரிஸ் நகரில் வாகனப் போக்குவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருதல். இதன் மூலம் வாகனப்புகை வெளியேற்றத்தைக் குறைத்து சூழல் மாசடைவைக் குறைத்தல்.
  • துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவித்தல். பாரிஸ் நகரில் துவிச்சக்கரப் பாதைகளை அதிகரித்தல். பாதுகாப்பான ( Vélo Boxes ) தரிப்பிடங்களை நிர்மாணித்தல். இன்னும்
  • மின்சார துவிச்சக்கர வண்டிகள் வாங்குவதற்கான நிதி உதவி எனத் திட்டங்களை முன்வைத்துள்ளது.
  • மாதத்தில் முதல் ஞாயிறு Champs Elysées பாதசாரிகளுக்கானது.
  • அதேபோன்று மாதத்தின் வாரஇறுதி நாட்களுள் ஒன்று பாரிசின் முதல் நான்கு அலகுப்பகுதி (பாரிஸ்1,
  • 2, 3, 4) பாதசாரிகளுக்குமானதாகும்.
  • இன்னும் பாரிசின் ஒவ்வொரு பகுதிக்கும் 75001 முதல் 75020 வரை ஒரு வீதி சிறுவர்களுக்கானதாகும். அங்கு வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை வீதியில் சிறுவர்களுக்கான பல விளையாட்டுக்கள் நிறுவப்பட்டுள்ளன.