1946 உருவகம் பெற்ற பிரான்ஸ் அரசியல் அமைப்புச் சட்டமூலங்களில் «Race» எந்த இனத்தவர் எனப்பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச் சொல்லாடல் இனவெறியை இனப்பாகுபாடை வலியுறுத்தும் வகையிலுள்ளது எனவும் இச்சொல்லாடல் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் எனவும் பல அரசியல் அமைப்புகளால் சாடப்பட்டு வந்தது. பிரான்சில் «Race» எனும் சொல்லாடல்
2012ல் பிரான்சுவா ஹொலந்தின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருந்தும் அவர் நீக்கத் தவறிவிட்டார். இம்முறை Les Républicains En Marche ! கட்சியினரால்
முன்னெடுக்கப்பட்டு நீண்ட பாராளுமன்ற விவாதங்களுக்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரான்ஸ்
அரசியல் அமைப்புச் சட்டமூலங்கள் இனமத பாகுபாடு ஒருபோதும் பார்க்காது எனவும், இத்தகைய பாகுபாடுகள் பிரான்ஸ் குடியரசின் அடிப்படை மதிப்பீடுகளை அவமதிக்கும் வகையில் உள்ளன எனவும் LREM பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் அரசியலமைப்புச் சட்டமூலங்கள் மட்டுமல்லாது
பிரான்சின் அனைத்து சட்டமூலங்களுக்கு முன்னும் இன மதம் மட்டுமல்லாது ஆண் பெண் பாகுபாடுகளும் களையப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
முற்றாக நீக்கப்படுகிறது!