February 9th, 2019 | : செய்திகள் |

புகை பிடிப்போர் தொகை குறைகிறது..!



பிரான்சில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 2018ம் ஆண்டில் 40,23 மில்லியார்ட் சிகரட்டுக்கள் விற்பனைக்காக Tabac க்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டில்; இத்தொகை 44,36 மில்லியார்ட்டாக இருந்தது. 2018ல் 9,32 சதவீதத்தால் சிகரட்
விற்பனை குறைந்துள்ளது. 2017ல் 2016ஐ விட 5, 66 சதவீதம்
குறைவாகவிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் மக்கள் தமது உடல் நலம் தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர் என சுவாச நோய்கள் தொடர் மருத்துவர் Bértrand Dautzenberg மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான முக்கிய காரணங்களாக,
* அதிகரித்துவரும் சிகரட்டின் விலை. தற்போது 8 யூரோ வரை உயர்வு பெற்றுள்ளது. 2020ம் ஆண்டில்
1 பக்கட் சிகரட்டின் விலை 10 யூரோவாக மாற்றம் பெறும்.

* எந்தவித இலச்சினைகளோ, அழகியலோ இல்லாது சுவாச நோய்களால் தாக்கப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் அச்சிடப்படும் சிகரட் பெட்டிகள். இது இளையவர்கள் மத்தியில் வெகுவாகக் கவர்ச்சியை இழக்கக் காரணமாகும். இத்தகைய சிகரட் பெட்டிகளைப் பார்க்கும் போது புகைப்பதற்கான “மூட்” இல்லாமல் போகிறதாம்!

வருடா வருடம் புகை பிடிப்பதனால் பிரான்சில் 75 ஆயிரம் பேர்வரை உயிர் இழக்கின்றனர்.

உலகிலேயே சிகரட் பக்கட்டின் விலை அவுஸ்திரேலியாவிலேயே அதிகமாகும். ஒரு பெட்டி சிகரட்டின் விலை 13,6 யூரோக்களாகும்.