August 18th, 2018 | : செய்திகள் |

பெண் - உயர் பதவிகளை ஊக்குவிக்க GOOGLE நிறுவனம் முதலீடு!

Google நிறுவனம் உலகத்தரப்பில் பெண்கள் உயர்பதவிகள் வகிப்பதை ஊக்குவிக்க முதலீடுகள் செய்யவுள்ளனர். குறிப்பாக தொழில்நுட்பத்துறை நிறுவனங்களுக்கு தலைமைத்துவம் வகிக்க. தொழில்நுட்பத்துறை பெரும்பாலும் ஆண்களின் வசமே உள்ளது எனவும் இந்நிலையை மாற்றி பெண்களை முன்னிலைப்படுத்துவதால் ஆண் பெண் சமத்துவத்தைப் பேணுவதற்கும் ஊதிய ரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கும் வழிவகுக்கும் என கூகிள் நிறுவனம்
தெரிவித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கை 2017ம் ஆண்டில் மட்டும் ஆண் பெண் ஊதிய ஏற்றத்தாழ்வுகளால் 160 மில்லியாட் டொலர் வருவாய் இழப்பு
ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. கூகிள் இத்திட்டத்தை SheStarsஅமைப்புடன் இணைந்து செயற்படுத்தவுள்ளது.