February 18th, 2019 | : செய்திகள் |

வன்முறையில் ஈடுபடும் மாணவர்; குடும்பங்களுக்கான சமூகக் கொடுப்பனவு இரத்துச்செய்யப்படும்!

பாடசாலைகளில் அதிகளவு வன்முறையில் ஈடுபடும் மாணவர்களின் குடும்பங்களுக்கான சமூகக்கொடுப் பனவை ரத்துச் செய்யும் திட்டத்தை கல்வித் துறை அமைச்சர் Jean – Michel Blanquer முன்வைக்கவுள்ளார்.

நீண்டகாலமாக பேச்சுவார்த்தையில் இருக்கும் இத் திட்டம் அமுலுக்கு வருவதற்கான இறுதிக் கோப்புகள் ஜனவரி இறுதியில் பாராளுமன்றத்துக்கு வரவுள்ளன.

தொடர்ந்து பாடசாலைகளுக்;கு வருகை தராமை மற்றும்
வன்முறையாளர்களை கல்வியகங்கள் ( Collège மற்றும் நிர்வாகங்கள்) Allocations Familiales க்கு அடை யாளம் காட்டும் பட்சத்தில் அக் குடும்பத்துக்கான கொடுப்பனவு நிறுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சூழ்நிலையின் தீவிரத்தன்மையை குடும்பத்தினர் உணர வேண்டும். தமது குழந்தைகள் சமூகத்தில் விளைவிக்கும் செயற்பாடுகளால் பாடசாலைக்கோ அல்லது சக மாணவனுக்கோ ஏற்படுத்தும் தாக்கங்களை அவர்களும் அறிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் Créteil பாடசாலையில் ஒரு ஆசிரியர் Lycée மாணவனால் தாக்கப்பட்ட பின்னர் பாடசாலை பாதுகாப்புக்கள் தொடர்பான விவாதங்கள் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டன. ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு என உட்துறை அமைச்சரால் முன்வைக்கப்பட்ட திட்டம் நீதித்துறை அமைச்சரின் எதிர்ப்புக்குப்பின்னர் ஓத்திவைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.