October 6th, 2015 | : செய்திகள் |

2017 தேர்தலை நோக்கி சார்க்கோசி..

மிக அண்மையில் தனது கட்சிப்பெயரை மாற்றியமைத்த நிக்கோலா சார்க்கோசி 2017ம் ஆண்டு அதிபர் தேர்தலை முன்வைத்து நகரத்தொடங்கி விட்டார். கட்சி இதுவரை சந்தித்து வந்த இறங்கு முகங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை சரி யானமுறையில் நடைமுறைப்படுத்த முனைப்புக்காட்டுகிறார். மேலும் வளர்ந்துவரும் தேசியமுன்னணி ஆதரவாளர்களைத் தன் பக்கம் இழுத்துவிட அதிக ஆர்வம் காட்டுகிறார். இதன் மூலம் எதிர்வரும் அதிபர் தேர்தலின் முதல் சுற்றிலேயே வென்றுவிடவிரும்புகிறார்.

சோசலிசக்கட்சியினர் பிரான்சின் தற்போதைய நிலையில் மாற்றங் களைக் கொண்டு வந்துவிடலாம் என்னும் கற்பனையான நம்பிக் கையை மக்கள் மனதில் விதைத்து ஆட்சிபுரிந்து வருகின்றனர். ஆனால் அவர்களால் எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்திவிட முடியாது. தற்போது அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக அனைத்துப்பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து சரியான முடிவுகளை முன்வைக்கக் கூடிய தகைமை Les Républicains கட்சிக்கு மட்டுமேயுள்ளது. இந்நிலையில் தேசிய முன்னணிக்கட்சியினரே எங்களுக்கு வாக்களியுங்கள்! என்ற எங்களது கோரிக்கை அவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கல்ல. மாறாக அவர்கள் பிரான்ஸ் மீதும், பிரான்சின் நலன்கள் மீதும் கொண்டுள்ள கவலைகளுக்குத் தீர்வாகவே முன்மொழிந்துள்ளேன்; என சார்க்கோசி தனது நகர்வை ஆரம்பித்துள்ளார்.