April 1st, 2019 | : செய்திகள் |

Brexit

Résultat de recherche d'images pour "brexit"

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இந்தமாத இறுதியுடன் (மார்ச்29) இங்கிலாந்து விலகவேண்டும். ஆயினும் இரண்டாவது முறையாகவும் இங்கிலாந்து பிரதமர் முன்வைத்துள்ள பிரெக்ஸிட்
வரைவுத்திட்டத்தை நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.
ஒப்பந்தங்கள் எதுவுமில்லாது வெளியேறவும் நாடாளுமன்றம்
அனுமதிக்கவில்லை. இந்நிலையில் புதிய வரைவுத்திட்டத்தை
சரிவர உருவாக்க முயல்வேன் என பிரதமர் தெரேசா மே
உறுதியளித்துள்ளார்.


குடியேற்றவாசிகள் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம்
தாராளவாத போக்கினைக் கடைப்பிடிப்பதே இங்கிலாந்து
ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான முக்கிய காரணமாகும்.
குடியேற்றவாசிகளால் தமது கலாசாரம் மற்றும் பொருளா
தாரம் மிகமோசமாக பாதிக்கப்படுவதாக பிரித்தானியர்கள்
நம்புகின்றனர். 2016ல் எடுத்த வாக்கெடுப்பின்படி 51.9 வீதமான
பிரித்தானியர்கள் பிரிந்து செல்வதையே விரும்புகின்றனர்.
ஆனாலும், பிரிந்துசெல்வது ஒன்றும் அத்தனை எளிதான
விடயம் அல்ல. சுமூகமாக பிரிந்து செல்வதாயின் வணிகம்,
இராஜாங்கம் என அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளும்
வகையில் தெளிவானதொரு வரைபுத்திட்டத்தை பிரித்தானியா
முன்வைக்கவேண்டும்.


கடந்த மூன்று வருடங்களில் தெரேசா மே அவர்கள்
வரைபுத்திட்டத்தை தொடர்ந்து செதுக்கிவருகிறார். ஆயினும்
நாடாளுமன்றத்தில் அது இன்னும் திருப்தியாய் அமையவில்லை.
பிரிந்து செல்லவேண்டிய கால எல்லையை யூன் 30 வரை
ஒத்திவைக்குமாறு ஒன்றியத்தலைவர் Donald Tusk அவர்களிடம் பிரதமர் தெரேசா மே கோரிக்கை கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் ‘ஒத்திவைப்பிற்கான
சரியான காரணங்களை தெரிவிக்கவேண்டும். தெளிவான
வரைபுதிட்ட ஒப்பந்தம் முன்வைக்க வேண்டும் இல்லையெனில்
ஒத்திவைப்பு சாத்தியமில்லை’ என வலியுறுத்தியுள்ளார்.
ஜேர்மன் சான்சலர் ஆங்கெலா மெர்கஸ் அவர்களோ
‘நான் பொறுமையிழந்து வருகிறேன்’ என்கிறார். இனிவரும்
நாட்களுக்காக காத்திருப்போம்!.

பிரித்தானிய பிரதமர் திரேசா மே அம்மையாரின் கோரிக்கையை
அடுத்து ஒன்றுகூடிய ஐரோப்பி பாராளுமன்றம் Brexit திகதியை மே 29ற்கு ஒத்திவைத்துள்ளது. ஏப்பிரல் 12ற்கு முன்பதாக தெளிவான ஒப்பந்தம் திரேசா மேயினால் முன்வைக்கப்படாத பட்சத்தில் இங்கிலாந்து வெளியேறும். இது இங்கிலாந்திற்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என ஐரோப்பிய
பாரளுமன்றம் எச்சரித்துள்ளது.