February 18th, 2019 | : செய்திகள் |

mcdo

Mc டொனால்ட் துரித உணவகத்தின் பிரபல சான்ட் விச்சான ‘ Big Mac’ஐ எதிர்வரும் காலங்களில் ‘ Big Mac’என அழைக்க முடியாது.

Mc டொனால்ட் ‘ Big Mac’ என்னும் பெயரை ஐரோப்பாவில் பயன்படுத்த முடியாது என ஐரோப்பிய என்ற வர்த்தகக் குறி
( Trademark )பதிவு மையம் அறிவித்துள்ளது.

பிரச்சனை ஆரம்பமானது அயர்லாந்தில். 1978ம் ஆண்டு உருவான Supermac’s துரித உணவகம் இன்று 106 துரித உணவகங்களுடன் மக் டொனால்ட்டை விடப் பிரபலமாக அயர்லாந்தில் கோலாச்சி வருகின்றது. Supermac’s உணவகத்தினர் அயர்லாந்தை விட்டு வெளியே ஐரோப்பிய நாடுகளில் காலெடுத்து வைக்க எத்தனிக்கையில் Mc டொனால்ட் தனது முதலாவது வழக்கைப் பதிவு செய்தது. Supermac’s தனது பெயரை மாற்ற வேண்டும். பல சான்ட் விச்சுகளுக்கு எம்மைப் போன்றே பெயர்கள் வைத்துள்ளனர் எனத் தெரிவித்தனர்.

Supermac’s உணவகத்தினர், கடந்த 30 வருடங்களாக அயர்லாந்தில் Mc டொனால்ட்டும் உள்ளது Supermac’s ம் உள்ளது. எந்தவித பெயர் குழப்பமுமில்லாமல்தானே வியாபாரம் நடைபெற்று வருகின்றது என வாதிட்டனர்.

வழக்கைத் தீரவிசாரித்த ஐரோப்பிய பெயர்பதிவு மையம், மக்டொனாட் சொல்வது சரிதான் Supermac’s தமது பெயருடன் ஐரோப்பாவுக்குள் நுழைய முடியும். இருப்பினும் சான்ட்விச்சுக்களின் பெயர்களில் மாற்றங்கள் செய்யவேண்டும் என 2017ல் தீர்ப்பு வழங்கியிருந்தனர். மேலும் இது துரித நிறுவனங்களின் சான்ட்விச் பெயர்கள் ஒரே மாதிரி இருப்பது Supermac’s உணவகம் மக்டொனால்ட்டின் புதிய வகை உணவகங்களோ என்ற குழப்பம் மக்களிடையே எழக்கூடும் எனவும் தெரிவித்திருந்தனர்.

Supermac’s உணவகமோ Mc டொனால்ட் எமது வளர்ச்சியை ஐரோப்பாவுக்குள் வளரவிடாமல் தடுப்பதற்காகவே பல சான்ட்விச்களின் பெயரை எமது உணவகத்துடன் ஒத்த பெயர்களாக வைத்து எம்மைத் தடுத்து வருகின்றனர் என மீண்டும் வழக்கை மீள்பரிசீலனை செய்யக் கோரினர்.

மீள்பரிசீலனையின் அடிப்படையில் 15 ஐனவரி 2019ல் L’EUIPO (l’union euro- péenne pour la propriétér interlectuelle) பெயர்பதிவு ஆய்வு மையம் தீர்ப்பை வழங்கியுள்ளது. மக்டொனால்ட்டும் Supermac’s உணவுடன் ஒத்த பெயர்களைக் கொண்ட சான்ட்விச்களின் பெயர்களை மாற்ற வேண்டும். அவற்றில் குறிப்பாக ‘ Big Mac’ எனத் தெரிவித்துள்ளனர்.

மக்டொனால்ட் உடனடியாக எந்தவித எதிர்ப்புகளையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் நிச்சயம் மேல்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மக்டொனால்ட் உலகெங்கும் ஒரு நாளுக்கு 69 மில்லியன் வாடிக்கையாளர்களுடன், 119 நாடுகளில் 36258 உணவகங்களுடன் இயங்கி வரும் தவிரக்க முடியாத பாரிய அமெரிக்க நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தாவீதுக்கும் கோலியாத்துக்குமான போர்தான் எனத் தெரிவித்த Supermac’s உணவகத்தின் நிறுவனரான Pat McDonagh நாம் தொடர்ந்து போராடி வெற்றியீட்டுவோம் எனவும் வெகு விரைவில் இங்கிலாந்தில் எமது முதலாவது உணவகத்தை ஆரம்பிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.